திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வார இறுதி நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தருகின்றனர். அதன்படி, நேற்று காலை திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் 2-வது மலைப்பாதையில் பைக்கில் சென்ற பக்தர்கள் சிறுத்தையை பார்த்தனர்.

அவர்கள் உடனடியாக சிறுத்தை சாலையைக் கடப்பது குறித்து கோயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுத்தை இருந்த பகுதியை ஆய்வு செய்தனர். திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.