உத்தரபிரதேசம்: உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்து வரும் மஹா கும்பமேளாவில் புனித நீராட பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசம், மஹா கும்பமேளாவில் இதுவரை 27 கோடி பேர் புனித நீராடியுள்ளனர். மஹா கும்பமேளா ஜன. 13ம் தேதி தொடங்கிய நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து புனித நீராடுவதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர்.
அண்மையில் மவுனி அமாவாசையில், கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்குப் பிறகும், கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் உத்தரபிரதேச மாநிலம் முழுவரும் திருவிழா கோலம் பூண்டது போல் உள்ளது.