புதுடெல்லி: மொரீஷியஸ் நாட்டின் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக மொரீஷியஸ் செல்கிறார். மொரீஷியஸில் தேசிய தின விழா மார்ச் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு மொரீஷியஸ் அதிபர் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் பிரதமர் மோடி மொரீஷியஸ் செல்கிறார். இந்நிகழ்ச்சிகளில் இந்திய பாதுகாப்புப் படையினரும் பங்கேற்கின்றனர். இந்திய கடற்படை கப்பல் ஒன்று மொரிஷியஸ் செல்கிறது. மொரீஷியஸ் தலைநகர் போர்ட் லூயிஸில் மொரீஷியஸ் அதிபர் ராம்கூலத்தை பிரதமர் மோடி சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். மொரிஷியஸ் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.