அகமதாபாத்: “தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசிர்வாதம் எனக்கு தொடர்ந்து வருவதால் நான் மிகவும் செல்வந்தன்,” என்று பிரதமர் மோடி கூறினார்.
குஜராத்தின் நவ்சாரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “இன்று, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு பெண்ணுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாள் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெண்களிடமிருந்து உத்வேகம் பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம்” என்றார்.

மேலும், “எங்கள் அரசு பெண்களுக்காக பாடுபடுகிறது. ஆயிரக்கணக்கான கழிப்பறைகளைக் கட்டி பெண்களுக்கு கண்ணியத்தை அளித்துள்ளோம். இந்தியா பெண்கள் தலைமையிலான வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. புதிய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மசோதா பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகும். இது சகோதரிகள் மற்றும் தாய்மார்களுக்கான எனது அர்ப்பணிப்பு” என்றார்.
“ஒரு பழங்குடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஜனாதிபதி” என்றும் பிரதமர் மோடி கூறினார். “இன்று, பெண்களிடமிருந்து ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டிய நாள். நான் உலகின் மிகப் பெரிய பணக்காரன் என்று பெருமையுடன் சொல்ல முடியும். கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசிர்வாதம் எனக்கு உண்டு. இந்த ஆசிர்வாதங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் நான் உலகின் மிகப் பெரிய பணக்காரன்” என்றார்.