புதுடில்லி : ”சாதி அரசியல் என்ற பெயரில், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இதை முறியடிக்க வேண்டும்,” என, பிரதமர் மோடி கூறினார்.
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத் திருவிழா 2025 ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “வளர்ந்த இந்தியாவை உருவாக்க கிராமப்புற வளர்ச்சி முக்கியம். கிராமங்களின் செழிப்பு முக்கியம். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக நபார்டு (தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி) மற்றும் பிற பங்குதாரர்களுக்கு நன்றி.”
2047-க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நமது பயணம் வலுப்பெற்றுள்ளது.உலகமே இந்தியாவைப் போற்றி வருகிறது.சிலர் சாதி அரசியலின் பெயரால் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.இதை முறியடிக்க வேண்டும்.விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.விவசாயம், கடந்த 10 ஆண்டுகளில் கடன்கள் 3.5 மடங்கு அதிகரித்துள்ளன. கிராமப்புற பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
“கோவிட் தொற்றுநோய்களின் போது, இந்திய கிராமங்கள் எவ்வாறு நெருக்கடியைச் சமாளிக்கும் என்று உலகமே வியந்தது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் கடைசி நபருக்கு தடுப்பூசிகள் சென்றடைவதை நாங்கள் உறுதி செய்தோம். கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்த, நல்ல பொருளாதாரக் கொள்கைகள் தேவை. ஒவ்வொரு கிராமத்திலும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் பிரசாரத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம்” இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.