புதுடில்லி: பிரதமர் மோடி, மே 13 ஆம் தேதி முதல் 17 தேதி வரை நார்வே, குரோஷியா மற்றும் நெதர்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருந்த பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

இந்த முடிவு, கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக எடுக்கப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பின்னர் இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், பயங்கரவாதி மசூத் அசாரின் உறவினர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டனர். இதனால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகின்றது.
இந்திய பாதுகாப்பு நிலவரம் முன்னிட்டு, பிரதமர் மோடியின் பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.