விஜயவாடா: ஆந்திரப் பிரதேசத்தில் யோகா கலாச்சாரத்தை வலுப்படுத்தும் நோக்குடன் யோகஆந்திரா அபியான் என்ற புதிய முயற்சியை தொடங்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். வரும் ஜூன் 21 அன்று நடைபெறும் 11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ‘மண் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் 122வது பகுதியில் பேசுகையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் யோகாவை தங்கள் வாழ்கையின் ஒரு பகுதியாக ஏற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். யோகா தினத்திற்கான உற்சாகம் நாடு முழுவதும் மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். யோகஆந்திரா அபியான் மூலம், 10 இலட்சம் பேரை யோகா பழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இது போன்ற திட்டங்கள் மூலம் மாநிலங்கள் ஆரோக்கிய புரட்சியில் முன்னிலை வகிக்கின்றன என மோடி பாராட்டினார்.
சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைத்தளத்தில், “மண் கி பாத் நிகழ்ச்சியில் யோகஆந்திரா 2025 குறித்து குறிப்பிட்டதற்கு நன்றி பிரதமர் அவர்களே. மக்கள் அனைவரும் இதில் ஈடுபட்டு ஒன்றிணைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் மாதமெங்கும் யோகா பயிற்சிகள் நடைபெறவுள்ளன. 100 முக்கிய சுற்றுலா இடங்களில் யோகா நிகழ்வுகள் மற்றும் பல்வேறு செயற்க்கள்கள் நடைபெறவுள்ளன” என பதிவிட்டார்.
மேலும், “யோகாவை நம் நாள்தோறும் செய்யும் ஒரு வழக்கமாக மாற்றுவதற்காகவே இந்நிகழ்வுகள். ஜூன் 21 அன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள யோகா தினம் விழாவில் பிரதமர் அவர்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என அவர் கூறினார்.