பிரேசில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. “ஜி 20 மாநாட்டில் விவாதங்களில் பங்கேற்பதற்கும், உலகத் தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபடுவதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அவர் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவிலும் சில முக்கிய சந்திப்புகளை நடத்தினார். நைஜீரியாவில், 60 ஆண்டுகால நல்லுறவைக் கருத்தில் கொண்டு, அங்கு பிரதமர் மோடியின் பயணம் மிகுந்த ஆர்வத்துடனும் வரவேற்புடனும் இருந்தது. நைஜீரியா தலைநகர் அபுஜாவில் அதிபர் போலா அகமது டினுபுவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட மோடி, ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரேசில் சென்றார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது, பிரதமர் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.