மாஸ்கோ: ”இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,” என, ரஷ்ய செய்தி தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புதினின் அழைப்பின் பேரில், இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (ஜூலை 08) மாஸ்கோ செல்கிறார்.
இருதரப்பு உறவுகள், சர்வதேச மற்றும் பிராந்திய உறவுகள் குறித்து புதினுடன் ஆலோசனை நடத்தும் மோடி, இந்திய வம்சாவளி மக்களிடையே உரையாற்ற உள்ளார். இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்த மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.ரஷ்ய அதிகாரிகளுடனான இந்தியப் பிரதமரின் சந்திப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என ரஷ்ய செய்தித் தொடர்பாளர் பெஸ்கோவ் தெரிவித்தார்.
41 ஆண்டுகளுக்கு பிறகு..!
ஜூலை 9-ம் தேதி ஆஸ்திரியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் வான் டெர் பெல்லனை சந்தித்து பேசுகிறார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரியா செல்லும் முதல் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். அங்கிருந்து ஜூலை 10-ம் தேதி பிரதமர் வீடு செல்கிறார்.