புதுச்சேரி : தமிழ்நாட்டை போல் உடல் உறுப்புகளை தானம் செய்தால் அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற திட்டத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு இத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது.
உறுப்பு தானம் செய்வதன் மூலம் பல உயிர்கள் காக்கப்படுவதால், அதனை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், உடல் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, அதே உத்தியை புதுச்சேரி அரசு கையில் எடுத்துள்ளது. உடல் உறுப்புகள் தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தெரிவித்துள்ளது.