புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும். கட்சி வட்டாரங்கள் ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளன. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்காக, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான தேர்தல் ஜூன் 30-ம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும். மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுக்களை திரும்பப் பெறலாம்.

இதற்கான அறிவிப்பை தேர்தல் அதிகாரி அகிலன் வெளியிட்டுள்ளார். ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வார்கள். நாளை மறுநாள் மத்திய அமைச்சர் தருண்சுக் மாநிலத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பார்.
புதிய மாநிலத் தலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர் நேற்று தனது நியமன எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.