புது டெல்லி: அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி. 2024-25-ம் ஆண்டில், இருதரப்பு வர்த்தகம் 131.84 பில்லியன் டாலர் மதிப்புடையது. இதில், ஏற்றுமதி 86.5 பில்லியன் டாலர்கள். இந்த சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது 25 சதவீத வரியையும், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீத அபராத வரியையும் விதித்தார்.
பிப்ரவரி முதல் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், பிராண்டன் லிஞ்ச் தலைமையிலான அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் குழு இந்தியா வந்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து வர்த்தகத் துறையின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான இந்தியக் குழுவுடன் 16-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

பரஸ்பர நன்மைக்காக விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் அவரது குழுவினர் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தொடர இன்று அமெரிக்கா செல்கின்றனர்.
ராஜேஷ் அகர்வால் மற்றும் பிற அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர். அவர்கள் நியூயார்க்கில் அமெரிக்க குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.