பிரியங்கா காந்தி அவர்களின் தந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கூட ஏற்றுக்கொண்டவர் என்று அவரது சகோதரர் ராகுல் காந்தி அன்புடன் குறிப்பிட்டார்.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்திக்கு வாக்கு சேகரிக்க ராகுல் காந்தி வயநாடு வந்திருந்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தங்கள் தந்தை ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற நளினியை நேரில் சந்தித்து அரவணைத்தது தனது சகோதரி என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
நளினிக்காக வருந்துவதாக பிரியங்கா தன்னிடம் கூறியதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு தேவை வெறுப்பு அரசியல் அல்ல, அன்பின் அரசியல் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
இந்நிலையில், வயநாட்டில் பிரசாரம் செய்த பிரியங்கா காந்தி, கொட்டும் மழையிலும் பிரசார வாகனத்தில் அமர்ந்து வாக்கு சேகரித்தார். அண்ணனுக்கு எதிராக தினம் தினம் புதுப்புது பிரச்சனைகளை பாஜக கொடுக்கும் போது வயநாடு தொகுதி மக்கள் தன்னை ஆதரித்ததாகவும் உணர்ச்சிகரமாக பேசினார்.