புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், “அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க ஓராண்டுக்கு முன் இந்திரா உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினோம். இப்போது இந்த முயற்சி பெண்களின் தலைமைத்துவத்திற்கான சக்திவாய்ந்த இயக்கமாக மாறியுள்ளது.
உண்மையான சமத்துவத்தையும் நீதியையும் நிலைநாட்ட அதிக பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். பெண்களை மையமாகக் கொண்ட அரசியலை உருவாக்கும் நோக்கில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் அனைத்து பெண்களும் சக்தி அபியானில் இணைந்து அரசியலில் சேருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதன் மூலம் வலுவான கட்டமைப்புகளை உருவாக்கி அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த முடியும். கிராமங்கள் முதல் நாடு முழுவதும் நாம் ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்க முடியும்.