சென்னை : வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பங்குனி மாதம் தொடங்கியவுடனே வெயில் தன் வேலையை தொடங்கி விட்டது. இதனால், தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டுகிறது.
இந்நிலையில், ஒடிஷா மாநிலத்திற்கு வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தெலங்கானா, ஜார்கண்ட், மே.வங்கம் மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே இப்படி என்றால் மே மாதத்தில் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.