மேற்கு வங்கம் : மேற்கு வங்கத்தில் ரூ.50,000 கோடி முதலீடு செய்கிறது ரிலையன்ஸ் நிறுவனம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேற்குவங்க மாநிலத்துக்கு ரூ.50,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டிஜிட்டல் சேவைகள், பசுமை எரிவாயு மற்றும் சில்லறை வர்த்தக பிரிவில் இந்த முதலீடுகள் இருக்கும் என்றும் இந்தத் திட்டங்களால் 1 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்கும் எனவும் ரிலையன்ஸ் குழுமம் கூறியுள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் ரிலையன்ஸ் முதலீடு செய்வது அந்த மாநில மக்களின் வேலை வாய்ப்பையும் பொருளாதாரத்தையும் உயர்த்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.