திருமலை: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஐதராபாத் தலைமைச் செயலகத்தில் நேற்று தெலுங்கு திரையுலகினரை நேரில் சந்தித்து பேசினார். தெலுங்கு திரைப்பட வளர்ச்சிக் கழக தலைவர் தில்ராஜு, நடிகர்கள் நாகார்ஜுனா, வெங்கடேஷ், முரளி மோகன், நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் மற்றும் பலர் முதலமைச்சரை சந்தித்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

பின்னர், முதல்வர் ரேவந்த் ரெட்டி, டோலிவுட்டுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றார். புஷ்பா-2 படத்தின் போது சந்தியா திரையரங்கில் நடந்த சம்பவத்திற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அரசு இந்த சம்பவத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, ஒரு பெண் உயிரிழந்ததால் கடுமையான நடவடிக்கை எடுத்தது. சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் இல்லை. இனிமேல், பவுன்சர்கள் விஷயத்தில் அரசு தீவிரம் காட்டும். ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. திரைத்துறைக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.