ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் RRB இந்திய ரயில்வேயில் பல்வேறு வேலைகளுக்கான 7951 வேலை அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பல வழித்தடங்களில் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுவதால், அதிக எண்ணிக்கையிலான மத்திய அரசு ஊழியர்களை பணியமர்த்தும் பொதுத்துறை ரயில்வே துறையாகும். RRB (ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்) ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு ஆட்சேர்ப்பு பணிகளை நடத்தி வருகிறது.
இந்திய ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பர்வைசர், கெமிக்கல் மெட்டலர்ஜிக்கல் அசிஸ்டென்ட் ஆகிய பிரிவுகளில் காலியாக உள்ள 7,951 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ரசாயன உலோகவியல் உதவியாளர், ஆய்வாளர் பணியிடங்களுக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கான ஆரம்ப சம்பளம் ரூ.44,900 என கூறப்படுகிறது. ஜூனியர் இன்ஜினியர், டிப்போ சூப்பர்வைசர் பதவிக்கு 7934 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிகளுக்கு ரூ.35,400 முதல் சம்பளம் வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 – 36.
ஜூலை 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் கடைசி தேதி 29.08.2024 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: https://www.rrbchennai.gov.in/