புதுடில்லி: இந்திய திட்டவட்டமாக மறுப்பு… அமெரிக்கா தனது கடற்படை மூலம் ஈரானைத் தாக்க இந்தியத் துறைமுகங்களைப் பயன்படுத்தி வருவதாக வெளியான செய்திகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ராணுவ கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர் அளித்த நேர்காணல் ஒன்றில், அமெரிக்கக் கடற்படை இந்தியத் துறைமுகங்களை நாடிச் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் இது ஒரு முற்றிலும் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்தி என்று விளக்கம் அளித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் தற்போது இந்தியப் பெருங்கடல் வரை நீண்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானின் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. இதில் 87 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல், இந்தியாவிற்கு ஒரு நட்பு ரீதியான பயணத்தை மேற்கொண்டிருந்த போது தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஒரு போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடிப்பது இதுவே முதல்முறை என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.