பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிவித்தும், கடுமையான விரதம் கடைப்பிடித்தும் வருகின்றனர்.
இந்த ஆண்டு சபரிமலை கோவில் திறப்பு குறித்து தேவசம் போர்டு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தந்திரிகள் கந்தர் ராஜீவ், கந்தர் பிரம்மதத்தா ஆகியோர் முன்னிலையில் தற்போதைய மேலசாந்தி பி.என்.மகேஷ் தீபம் ஏற்றி ஐயப்ப சுவாமிக்கு பக்தர்கள் வருகையை அறிவிப்பார்.
அதன் பிறகு, 18 படிகள் திறக்கப்பட்டு, அதிகாரிகள் முதலில் ஏறுகிறார்கள். சபரிமலை மற்றும் மலையபுரம் கோவில்களில் கலச பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறும். டிசம்பர் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை தினசரி பூஜைகள் நடைபெறும்.பக்தர்கள் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம்.ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு தரிசனம் நடைபெறும்