திருவனந்தபுரம்: மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை கடந்த 26-ம் தேதி நடந்தது. அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.
இந்நிலையில், மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மகரவிளக்கு கால பூஜைகள் நாளை மறுநாள் தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற மகரவிளக்கு கால பூஜைகளும், மகரஜோதி தரிசனமும் ஜனவரி 14-ம் தேதி நடக்கிறது.