மஹாராஷ்டிராவின் மும்பை பாந்த்ராவில் உள்ள ‘சத்குரு ஷரண்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் வசித்து வருகிறார். கடந்த ஜனவரி 16ம் தேதி அதிகாலை, மர்ம நபர் சயீப் அலிகானின் வீட்டுக்குள் புகுந்து, கத்தியால் குத்தி படுகாயப்படுத்தினார். சயீப் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீடு திரும்பினார்.
இந்த தாக்குதலுக்கு பிறகு, மும்பை போலீசார் 19ம் தேதி ஷரிபுல் இஸ்லாம் முகமது அமின் பக்கீர் என்பவரை கைது செய்தனர். அவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் எனவும், போலீசார் அவரது மொபைல் போனை பறிமுதல் செய்தனர். ஆனால், இந்த வழக்கில் புதிதாக திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சயீப் அலிகானின் வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகள், தற்போது கைது செய்யப்பட்ட ஷரிபுலின் கைரேகைகளுடன் பொருந்தவில்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், போலீசார் புதிய ஆதாரங்களை சேகரிப்பதற்காக வேகமாக பணியாற்றி வருகின்றனர். இந்த சம்பவத்தின் அடிப்படையில், சி.சி.டி.வி. காட்சிகளும் கூடுதல் விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.