புதுடெல்லி: இந்தியாவில் பிறந்த பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. அவர் 1988-ம் ஆண்டு ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ (Satanic Poems) என்ற சர்ச்சைக்குரிய புத்தகத்தை வெளியிட்டார். முகமது நபி பற்றிய இந்த புத்தகம் சல்மான் ருஷ்டியின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தது. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
இதற்கிடையில், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு இந்த புத்தகத்தை இந்தியாவில் வெளியிட தடை விதித்தது. ருஷ்டியின் புத்தகத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து 2019-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறியதால், தடை விதிக்கப்படவில்லை என்று கருதுவதாகக் கூறி, கடந்த நவம்பரில் விசாரணையை முடித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பஹ்ரிசன்ஸ் புத்தகக் கடையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. புத்தகத்தின் விலை ரூ. 1,999. இந்த விலை அதிகம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.