புதுடில்லி: கரிஷ்மா கபூர் வழக்கில் கடும் வாக்குவாதத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ஈடுபட்டதால் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சஞ்சய் கபூர் திடீரென காலமானதால், அவருடைய சொத்துக்காக தற்போதைய மனைவி மற்றும் கரிஷ்மா கபூருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
தொழில் அதிபர் சஞ்சய் கபூரின் 30 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து தொடர்பாக கரிஷ்மா கபூர் வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் சஞ்சய் கபூரின் முன்னாள் மனைவி ஆவார். இவரது மகனுக்கு ஐந்தில் ஒரு பங்கு வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். சஞ்சய் கபூர் தன்னுடைய சொத்துகள் அனைத்தும், 2ஆவது மனைவி பிரியாவுக்கு எனக் கூறப்படுவதை எதிர்த்து, அவர் அதுபோன்று உயில் ஏதும் எழுதிவைக்கவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.
கரிஷ்மா கபூர் தொடர்ந்த வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. கரிஷ்மா கபூர் சார்பாக மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி ஆஜரானார். சஞ்சய் கபூரின் மனைவி பிரியா சார்பில் வழக்கறிஞர் நாயர் ஆஜரானார்.
விசாரணையின்போது ஜெத்மலானி: ஏனென்றால் என நாயர் வாதத்தின்போது குறுக்கிட முயன்றார்.
அப்போது நாயர் “தயவு செய்து என்னுடைய வாதத்தின்போது குறுக்கிட வேண்டாம். எனக்கு குறுக்கீடு பிடிக்காது” என்றார்.
உடனே ஜெத்மலானி, “அப்படி என்றால் தனியாகத்தான் வாதிட வேண்டும். என்னிடம் கத்த வேண்டாம். தயவு செய்து என்னிடம் கத்தாதீர்கள்” என்றார்.
நாயர் மீண்டும் “நீங்கள் என்னை குறுக்கீடு செய்கிறீர்கள்” என்றார்.
ஜெத்மலானி அதற்கு, “என்னைப் பார்த்து கத்தாதே. கவுன்சிலுக்கு கொஞ்சம் மரியாதை கொடுக்கவும். நீ கத்தினால், உனக்கு நாணயமாக பணம் திரும்பக் கிடைக்கும்” என்றார்.
அதற்கு நாயர் “உங்களுக்கு பழக்கமில்லையா..” என்ற தொணியில் பேச நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.