டாக்கா: வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான அணுமின் நிலைய ஊழல் வழக்கு விசாரணை தொடங்கியது. வங்கதேசத்தில் ஆகஸ்ட் மாதம் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். வங்கதேசத்தில் ரூப்பூர் அணுமின் நிலைய கட்டுமானப் பணியை ரஷ்ய அரசு நிறுவனமான ரோசாட்டம் மேற்கொண்டு வருகிறது.
இதில் இந்திய நிறுவனங்களும் பங்கேற்கின்றன. ரூப்பூர் அணுமின் நிலைய திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக தேசிய ஜனநாயக இயக்கத்தின் தலைவர் பாபி ஹஜ்ஜாஜ் அம்பலப்படுத்தியுள்ளார். இந்த அணுமின் நிலையத்தில் ஹசீனா, அவரது மகன் சஜிப் மற்றும் உறவினர் துலிக் ஆகியோர் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.42486 கோடி) மலேசிய வங்கிக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து ஷேக் ஹசீனாவிடம் ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் ஹசீனா, சஜிப் வாசேத் ஜாய் மற்றும் அவரது உறவினரும் இங்கிலாந்து கருவூல அமைச்சருமான துலிக் சித்திக் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.