டெல்லி: இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 28,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புதுமையான நிறுவனங்கள் எனப்படும் ஸ்டார்ட்அப்கள், ஒரு புதிய தயாரிப்பு அல்லது சேவையுடன் வணிகத்தைத் தொடங்கும் நிறுவனங்கள். அவற்றைத் தொடங்குபவர்கள் பெரும்பாலும் தொழிலதிபர்கள். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் 28,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தரவுகளை ஆய்வு செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த அமைப்பின் ஆய்வின்படி, 2023-ல் 15,921 நிறுவனங்களும், 2024-ல் 12,717 நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆண்டுகளில் மூடப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நஷ்டத்தால் முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 2019 மற்றும் 2022-க்கு இடையில் 2,300 ஸ்டார்ட்அப்கள் மூடப்பட்டதாக NGO கூறியது, இது முந்தைய ஆண்டுகளில் மூடப்பட்ட ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கையை விட 12 மடங்கு அதிகம்.
இந்த ஆண்டு இதுவரை 125 ஸ்டார்ட்அப்கள் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ஆண்டு 259 ஸ்டார்ட்அப்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.