புதுடெல்லி: கனடாவில் இந்து கோவில்கள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் உள்ள கனேடிய தூதரகம் முன்பு சீக்கியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியும், கனடா குடியுரிமை பெற்ற ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார்.
இந்த கொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். இதை இந்தியா மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடந்த 3-ம் தேதி கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள இந்து சபா கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் நாட்டில் உள்ள சில இந்து கோவில்கள் இந்துக்களால் தாக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை கண்டித்து இந்து சீக்கிய உலக அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள கனடா தூதரகம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான சீக்கியர்கள் கலந்து கொண்டனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். டீன் மூர்த்தி மார்க் பகுதியில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசார் போடப்பட்டிருந்த தடுப்புகளை மீறி போராட்டக்காரர்கள் செல்ல முயன்றனர். இந்து சீக்கிய உலக அமைப்பின் தலைவர் தர்விந்தர் சிங் மார்வா கூறும்போது, “நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறுவதற்காக நாங்கள் இங்கு கூடியுள்ளோம்.
உண்மையான சீக்கியன் ஒருபோதும் காலிஸ்தானியாக இருக்க மாட்டான். காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நமது மூவர்ணக் கொடியும், நமது நாடும் எப்பொழுதும் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்தியாவுக்கு ஆதரவானவர்கள். நாங்கள் காலிஸ்தானை ஆதரிக்க மாட்டோம்.