புதுடில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்டிற்கு மதுபானி கலையை கொண்டாடும் விதமாக சிறப்பு சேலையில் வந்தார். மதுபானி ஓவியங்கள் இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன. இந்து கடவுள்கள், தெய்வங்கள், புராணக் கதைகள் ஆகியவை இதில் இடம்பெறும். இந்த கலை வடிவம் நீண்ட காலமாக கோவில்கள், வீடுகள் போன்ற இடங்களில் அலங்காரத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மிதிலா ஆர்ட் இன்ஸ்டியூட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மதுபானி ஓவியங்களின் சிறப்பை கேட்டறிந்தார். அங்கு பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவி அவர்களை நேரில் சந்தித்தார். இவர் இந்திய பாரம்பரியக் கலையைக் கொண்டாடும் முக்கியக் கலைஞர்களில் ஒருவராக உள்ளார். அவரிடமிருந்து பரிசாக பெற்ற மதுபானி புடவையையே பட்ஜெட் நாளில் அணிந்துள்ளார்.
2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரிதேவி, இந்த பாரம்பரியக் கலையை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார். நிதியமைச்சரின் இந்த செயல் பாரம்பரியக் கலைகளுக்கு மகத்தான முக்கியத்துவம் கொடுக்கிறது.