ஆந்திரா: EOS-08 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் SSLV-T3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS 08 இன்று காலை 9.17 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து SSLV T-3 ராக்கெட்டில் செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் 13 நிமிடங்களில் பூமியில் இருந்து 475 கிமீ உயரத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படும்.இந்த 3-நிலை ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையாகும். அதை ராக்கெட்டில் நிரப்பும் பணி முடிந்துள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடையுள்ள 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒவ்வொரு கருவி வேலை செய்கிறது. EOS-8 செயற்கைக்கோள் பேரிடர் கண்காணிப்பு, காலநிலை மற்றும் காட்டுத் தீ கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. EOS-8 கடல் காற்றின் வேகம், மண்ணின் ஈரப்பதம் மற்றும் இமயமலைப் பனிப்பொழிவு பற்றிய தரவுகளையும் வழங்குகிறது.