ஹைதராபாத்: தெலுங்கானாவின் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில், தொழிலாளர்கள் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் அம்ராபாத்தில் சுரங்கப்பாதை ஒன்று இடிந்து விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிலாளர்கள் 30 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாயமான தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாகர்கர்னூல் மாவட்ட கலெக்டர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணி மேற்கொள்ள வேண்டும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார். அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.