நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான இன்று நடப்பு நிதியாண்டின் முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். நடப்பாண்டின் 2-ஆவது பட்ஜெட் கூட்டத் தொடா் நேற்று தொடங்கி 19 அமா்வுகளுடன் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத் தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய 9 முக்கிய அம்சங்களை இந்த பட்ஜெட் கொண்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாட்டுக்கு ரூ. 1.48 லட்சம் கோடி நிதியும்,வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் முறை பணிக்கு செல்பவர்களுக்கு அரசு ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும். அதன்படி முதல் முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஊதிய தொகையோடு சேர்த்து கூடுதலாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படும்; இந்த தொகை 3 தவணைகளில் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டம் முறைசார் நிறுவனங்களில் மாத ஊதியம் ஒரு லட்சம் வரை பெறுவோருக்கு பொருந்தும். இதன் மூலம் 2.1 கோடி இளைஞர்கள் பயன்பெறுவர்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், நகர்புறங்களில் வீடு கட்டுவதற்கு 1 கோடி பேருக்கு நிதி வழங்கப்படும். பிகாரில் மின் ஆலை அமைக்க ரூ.21,400 கோடியும், வெள்ளத்தடுப்பு அமைக்க ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
பிற மாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் அரசு – தனியார் பங்களிப்பில் தங்குமிடம் அமைத்து தரப்படும். 5 ஆண்டுகளில் முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டம்.
பிரதமரின் வீடு கட்டும் ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்திற்காக ரூ. 10.லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. மேலும் ஊரக வளர்ச்சிக்காக ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். முத்ரா திட்டத்தின் மூலமாக வழங்கப்படும் கடன் அளவு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும். ஊரக வளர்ச்சி, பெண்கள் மேம்பாட்டுக்கு 1.07 லட்சம் கூடுதல் நிதி வழங்கப்படும்.
தங்கம், வெள்ளி நகைகளுக்கு 6%, பிளாட்டினம் நகைகளுக்கு 6.4% ஆக சுங்க வரி குறைப்பு . செல்போன்கள், உதிரி பாகங்கள், செல்போன் சார்ஜர்களுக்கு சுங்க வரி 15% ஆக குறைப்பு. விண்வெளி சார்ந்த் திட்டங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
இறால் மற்றும் மீன் தீவனங்களுக்கு சுங்க வரி 5% ஆக குறைப்பு. அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி குறைக்கப்படும். அன்னிய நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 35% ஆக குறைப்பு. புதிய வருமான வரி திட்டத்தில் நிலைக்கழிவு (standard deduction ) ரூ.50,000-லிருந்து ரூ.75,000ஆக உயர்வு