புதுடில்லியில் வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்கள் இன்று ஏப்ரல் 16ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கின்றன. பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்தச் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், ஓவைசியின் எம்.ஐ.எம்., அகில இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி திமுகவின் துணை பொதுச்செயலர் ஆ.ராசாவும் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வக்ப் திருத்த சட்டம் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை மீறுவதோடு, சட்ட ரீதியாக பாகுபாடும் காட்டுகிறது என்பதாகும்.
இந்த வழக்குகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. இந்த விசாரணையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு மேற்கொள்ளவுள்ளனர்.