உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து பட்டியலை பொதுவெளியில் வெளியிடாதிருந்த நிலையில், அண்மையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நீதித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எரிந்த பணம் குறித்து யஷ்வந்த் வர்மா அதற்கு தனது சொந்தமானது அல்ல என்று மறுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, நீதித்துறையின் மீது நம்பிக்கையை வலுப்படுத்த சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தங்களது சொத்து பட்டியலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க முடிவெடுத்துள்ளனர். இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் உச்சநீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதற்கு முன்னதாக, இந்த சொத்து பட்டியல் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அது பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது, இந்த விவகாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.