தெலுங்கானாவில் பெண் நீதிபதி மீது குற்றவாளி ஒருவர் ஷூவை வீசினார். சர்தார் சீமகுர்த்தி என்கிற கரன்சிங் (22) ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள செர்லோபள்ளி மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார். ஜனவரி 5, 2023 அன்று, ஹைதராபாத் வெளிவட்ட சாலை பகுதியில் காரில் சென்றவர்களை வழிமறித்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டார். அப்போது, ஒருவரை கொன்றுவிட்டு தப்பியோடினார்.
மறுநாள் கரன்சிங்கை கைது செய்ய சென்ற 2 போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு ஓட முயன்றார். அதன்பின், கரன்சிங்கை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை, கொள்ளை, போலீஸ்காரர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு விசாரணை ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 12-ம் தேதி, போலீஸ் அதிகாரி மீதான கொலை முயற்சி வழக்கில் கரண் சிங்குக்கு ஆயுள் தண்டனை விதித்து பெண் நீதிபதி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து சரண்சிங்கிடம் கொள்ளை மற்றும் கொலை வழக்கில் சரண்சிங்கிடம் விசாரணை நடத்த சரண்சிங்கை போலீசார் நேற்றுமுன்தினம் அதே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அதே பெண் நீதிபதி சரண் சிங் வழக்கை விசாரித்து வந்தார். ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த குற்றவாளி சரண் சிங் திடீரென தனது செருப்பைக் கழற்றி பெண் நீதிபதி மீது வீசினார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. செருப்பு அடிக்காதபடி நீதிபதி உடனே சற்று நகர்ந்தார். உடனே அங்கிருந்த போலீசார் மற்றும் பாதுகாவலர்கள் சரண் சிங்கை பிடித்து அங்குள்ள அறைக்கு இழுத்து சென்றனர். இதற்குள் அங்கிருந்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு குற்றவாளி சரண்சிங்கை வரிசையாக தாக்கினர். அதன்பின் சரண் சிங்கை மீட்ட போலீசார், மீண்டும் செர்லோபள்ளி சிறையில் அடைத்தனர்.
இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி, ரங்காரெட்டி மாவட்ட முதன்மை நீதிபதி சசிதர் ரெட்டியிடம் நடந்த சம்பவத்தை விவரித்து, சம்பவம் குறித்து புகார் அளித்தார். சரண் சிங் மீது போலீசார் மற்றொரு வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் நீதிபதியை விசாரணை குற்றவாளி ஒருவர் காலணியால் தாக்கிய சம்பவத்திற்கு நீதிபதிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.