திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் வயது 5-ல் இருந்து 6 ஆக உயர்த்தப்படும் என அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். கேரள பொதுக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது:-

கேரளாவில் தற்போது 1-ம் வகுப்பு சேர்க்கை வயது 5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 வயதில்தான் குழந்தைகள் உடல் மற்றும் மனரீதியாக முறையான கல்விக்கு தயாராகிறார்கள் என அறிவியல் ஆய்வு கூறுகிறது. இதனாலேயே கல்வியில் முன்னேறிய பல நாடுகள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் வயதை 6 ஆக நிர்ணயித்துள்ளது.
அடுத்த கல்வியாண்டு (2026-27) முதல் கேரளாவில் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் வயது 5-ல் இருந்து 6 ஆக உயர்த்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.