புதுடெல்லி: டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தா, ஆம் ஆத்மி ஆட்சியில் நடந்த ஊழல் வழக்குகளை தீவிரமாக விசாரித்து வருகிறார். இந்த வரிசையில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல் நடந்துள்ளது குறித்தும் விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது.

இதை பரிசீலித்த மத்திய உள்துறை அமைச்சகம், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் 2,400-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டப்பட்டதில் ரூ.1,300 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) பிப்ரவரி 2020-ல் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.