இந்தியாவில், 2024-2025ல், மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து, தமிழகத்துக்கு, ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என, மத்திய அரசு பதில் அளித்துள்ளது. பேரிடர் நிவாரணம் தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் சுப்பராயன், செல்வராஜ் ஆகியோர் கேள்வி எழுப்பியதையடுத்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு தமிழகத்துக்கு ரூ.1,260 கோடி ஒதுக்கப்பட்டும், இதுவரை ஒரு தவணை கூட விடுவிக்கப்படவில்லை. அதேபோல், ஆந்திரா, அசாம், பீகார், தெலுங்கானா போன்ற சில மாநிலங்களுக்கும் இரண்டாம் தவணை வரை நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்துக்கு ரூ.276 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவுக்கு ரூ.3,454 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.