மேற்குவங்கம் : மேற்குவங்க மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானையை பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு துரத்தினர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் யானை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்துள்ளது. அதனை அப்பகுதி மக்கள் ஜேசிபி கொண்டு விரட்ட முயற்சி செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த யானை ஜேசிபி-யுடன் மோதியது. பின்னர் அங்கிருந்த கட்டடத்தை இடிக்க முயன்றதாகவும், இதனால் அந்த யானை சிறிது காயம் அடைந்து அங்கிருந்து விலகிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.