புதுடெல்லி: 5 மாதங்களில் இல்லாத வகையில் பிப்ரவரி மாதத்தில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.9 சதவீதமாக சரிந்துள்ளது. மொத்தம் 8 முக்கிய துறைகளில் பல துறைகளின் வளர்ச்சி பிப்ரவரி மாதத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது. நிலக்கரி 1.7 சதவீதம் (கடந்த ஆண்டு பிப்ரவரியில் 11.6%), சுத்திகரிப்பு 0.8 சதவீதம் (2.6%), எஃகு 5.6 சதவீதம் (9.4%), மற்றும் மின்சாரம் 2.8 (7.6%) சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. உர உற்பத்தி 10.2 சதவீதமும், சிமென்ட் 10.5 சதவீதமும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் இந்த 8 துறைகளும் 4.4 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 2.4 சதவீத வளர்ச்சி இருந்தது.