திருப்பதி: திருப்பதி லட்டின் தரம் குறைந்தது குறித்த ஆய்வறிக்கையில் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், நெய் மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி மையத்தின் பரிசோதனைக் கூட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2 நெய் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த அறிக்கையில், மாதிரியில் விலங்கு கொழுப்பு, சோயா எண்ணெய், மீன் ஆயில், சன்பிளவர் ஆயில், ஆலிவ் ஆயில் ஆகியவை வழக்கத்துக்கு மாறாக கலந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் தரமற்றதாக இருப்பதாக, சில மாதங்களாகவே புகார் எழுந்து வந்த நிலையில் நடத்தப்பட்ட ஆய்வக சோதனையில், நிர்ணயிக்கப்பட்டதை விட நெய்யின் தரம் மோசமாக இருந்தாகவும் கூறப்பட்டுள்ளது. கோயம்புத்தூரை சேர்ந்த உணவு நிறுவனம் ஒன்று, தரமற்ற நெய்யை விநியோகித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.