புதுடில்லி: கார் வாங்குபவர்கள் எண்ணிக்கை உயர்வு… இந்தியாவில் கார் வாங்குபவர்களில் சுமார் 67 சதவீதம் பேர் முதல் முறையாக கார் வாங்குபவர்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சில்லறை விற்பனை தளமான ஸ்பின்னி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் முதன்முறையாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதை காட்டுகிறது.
அதே போல் இந்தியாவில் கார் வாங்குபவர்களின் சுமார் 30 சதவீதம் பேர் பெண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கார் வாங்குபவர்களின் 83% பேர் பெட்ரோல் கார்களையே வாங்க விரும்புகின்றனர். 12% பேர் டீசல் கார்களையும் 5% பேர் சிஎன்ஜி கார்களையும் வாங்க விரும்புகின்றனர் என்றும் சிவப்பு, வெள்ளை மற்றும் சாம்பல் நிறம் கொண்ட கார்களையே அதிகமானோர் வாங்க விரும்புகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.