ஹைதராபாத்: இந்த மிகப்பெரிய மாம்பழத்தின் விலை ரூ.900 என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அது உண்மைதான். ‘நூர்ஜஹான்’ ரகத்தைச் சேர்ந்த இந்த வகை மாம்பழம், மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் வளர்க்கப்படுகிறது. இந்த நூர் ஜஹான் மாம்பழத்தை அரச குடும்பத்தினர் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

நல்ல சுவை கொண்ட இந்த வகை மாம்பழம், தெலுங்கானாவின் அதிலாபாத் மாவட்டத்தில் விற்பனைக்கு வந்தது. இவை ஒவ்வொன்றும் 2 முதல் 5 கிலோ வரை எடையுள்ளதாக இருந்தது. நேற்று ஒரு கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்டது. வாடிக்கையாளரின் கையில் உள்ள மாம்பழம் 3 கிலோ எடை கொண்டது. எனவே, அவர் ரூ.900 கொடுத்து மாம்பழத்தை வாங்கினார்.