புதுடில்லி: 1954 முதல் 1971 வரை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு 200 கோடி டாலர் அளவுக்கு ஆயுதங்களை வழங்கியத 1971ம் ஆண்டு ஆகஸ்ட் 5ல் வெளியான நாளிதழின் செய்தியை இந்திய ராணுவம் சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் விரைவாக வைரலாகியுள்ளது.

இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்தியம் சார்பில் ‘எக்ஸ்’ (முந்தைய ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட அந்த நாளிதழ் பாகிஸ்தானுக்கு ராணுவ போர் விமானங்கள், ஏவுகணைகள், டாங்கிகள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் பீரங்கிகள் வழங்கப்பட்ட விவரங்களை கொண்டுள்ளது.
மேலும், அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் விசி சுக்லா பார்லிமென்டில் கூறியதன்படி, வங்கதேசம் உருவான பின்னர் பாகிஸ்தானுக்கு குறைந்த விலையிலேயே ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும், பாகிஸ்தானுக்கு சீனா அதிக அளவில் ஆயுதங்களை வழங்கி வந்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவுடன் வர்த்தகம் நடத்திய இந்தியா மீது கூடுதல் வரி விதித்துள்ளதாகவும், பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் ஒப்பந்தம் செய்யப்போகும் நிகழ்வும் நடந்து வருகிறது.