உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், இடுப்பில் வைத்திருந்த மதுபாட்டில் உடைந்து குத்தியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
ஹிமான்ஷு சிங் (22) என்பவர் அண்டை வீட்டாரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அங்கு கிடைத்த மதுபாட்டிலை தனது இடுப்பில் மறைத்து வைத்துள்ளார். இதனிடையே உறவினர் ஒருவர் வருவதைக் கண்டு சுவர் ஏறி குதித்து வீட்டிற்கு செல்ல முயன்றுள்ளார்.
அப்போது தவறி கீழே விழுந்ததில் பாட்டில் உடைந்து வயிற்றை கிழித்தது. ரத்தவெள்ளத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.