திருப்பதி: வளர்ப்பு நாயை கொன்றவர்கள் கைது… திருப்பதியில் வளர்ப்பு நாயைக் கொன்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பதியில் தனது வளர்ப்பு நாயைக் கொன்றர்களை கைது செய்ய கோரி பெண் காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தியதையடுத்து மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
நாய் தங்களது வீட்டை பார்த்து குறைத்ததால் எதிர்வீட்டில் வசிக்கும் சாய்குமார், சிவக்குமார் ஆகியோர் நாயை கல்லால் அடித்தும், கத்தியால் வெட்டியும் கொன்றதாக கூறப்படுகிறது.
லாவண்யா புகார் அளித்தும் கைது செய்யாமல், இழப்பீடாக 2 லட்சம் ரூபாய் பெற்றுத் தருவதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் அவர் போராட்டம் நடத்தியுள்ளார்.