குஜராத்: குஜராத்தில் 75 பயணிகளுடன் புறப்பட்டபோது விமானத்தின் டயர் கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
குஜராத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படும்போது டயர் கழன்று விழுந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா விமான நிலையத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. டேக்ஆஃப் ஆன நிலையில் டயர் ஒன்று கழன்று விழுந்தது.
இதை விமானத்தில் இருந்து பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அவர் விமானத்தின் டயர் கழன்று விழுந்தது என தொடர்ந்து சத்தம் போடுவது வீடியோவில் பார்க்க முடிந்தது.
மும்பை விமான நிலையத்தில தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டு, விமானம் தரையிறக்கப்பட்டது, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதால், பயணிகள் பாதுகாப்பாக வெளியேறினர்.
முன்னெச்சரிக்கை காரணமாக தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதால், எப்போதும் பரபரப்பாக இயங்கப்படும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானத்தில் சுற்று பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.