புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுச்சேரி-மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயலின் தாக்கத்தால் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
புதுச்சேரியில் பிரதான சாலைகள், தெருக்களில் ஆறுபோல் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. மாநிலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.