புதுடெல்லி: வருமான வரி கணக்கு (ஐடிஆர்) தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். வருமான வரித்துறை இந்த காலக்கெடுவை நீட்டிப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், 2023-24 நிதியாண்டுக்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என வருமான வரித்துறை நேற்று தெரிவித்தது. இன்றைக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யப்படாவிட்டால், பழைய வரி முறையின்படி வரி செலுத்துவோர் பலன்களைப் பெற முடியாது. தாமதமாக தாக்கல் செய்வதற்கு அபராதமும் விதிக்கப்படும்.
26ம் தேதி வரை 5 கோடி ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, வருமான வரித்துறை வெளியிட்டுள்ள X பதிவேட்டில், “ஜூலை 26 வரை, 2023-24ம் நிதியாண்டில், 5 கோடி ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது புதிய உச்சம்.”