காரைக்கால்: காரைக்காலில் கடல் திடீரென உள்வாங்கியதுடன், காற்றும் சுழன்றடித்து வீசியது. இதனால் மக்கள் அச்சமடைந்தனர்.
புத்தண்டு, அரையாண்டு விடுமுறை என்பதாலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், காரைக்கால் கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடலில் குளித்தும், செல்பி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடல் திடீரென உள்வாங்கியதுடன், காற்றும் சுழன்றடித்து வீசியது. இதைக்கண்டு அச்சமடைந்த சுற்றுலா பயணிகள், கடற்கரையை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர். கடற்கரையில் பொழுதை கழிக்க வந்த சுற்றுலா பயணிகள், வானிலை மாற்றம் மற்றும் கடல் உள்வாங்கிய நிகழ்வால், ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.