சிக்கமகளூரு: பருவ மழையால் சிக்கமகளூருவில் முள்ளயங்கிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போதும், இளைஞர்கள் – இளம்பெண்கள், ‘ரீல்ஸ்’ தயாரித்து, சுற்றுலா பயணிகளை கடுப்பாக்கினர்.
கர்நாடகாவில் பருவமழை தொடங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வார விடுமுறை நாளான நேற்று சிக்கமகளூரு மாவட்டம் முள்ளயங்கிரி மலையின் இயற்கை அழகை காண பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மலையில் பனி படர்ந்ததை கண்டு, சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி, ‘செல்பி’, ‘ரீல்ஸ்’ எடுத்தனர். இதனால் மலைக்கு செல்லும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போதும், ‘ரீல்ஸ்’ மோகத்தில் மூழ்கியஇளம் பெண்கள் பட்டாளம், பாடல் ஒலிக்க விட்டு குத்தாட்டம் போட்டனர்.
தொடர் மழை காரணமாக அருவிகளை காண சுற்றுலா பயணிகளும் குவிந்தனர். முல்லயங்கிரி, தத்தபீடம் உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களுக்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.